இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில், கோட்சவத்சலா ரயில் நிலையம் அருகே சமிஞ்சை இல்லாமல் நிறுத்தப்பட்டதாகவும், விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்காட் நோக்கிச் சென்ற விரைவு ரயில் அந்த ரயில் மீது மோதியதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் சமிஞ்சை பிழையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.