வருவாய் வரிக் கொள்கையை சீர்திருத்த அமைச்சரவை அனுமதி!

வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில் வரிக் கொள்கையை சீர்திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் வருவாய் அடிப்படையிலான நிதி நிலைத்தன்மைக்காக, பல வரி அடிப்படை அதிகரிப்பு மற்றும் முற்போக்கான வரிக் கொள்கை முன்மொழிவுகள் ஜூன் 2022 முதல் செயல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசாங்க வருவாய் வரி 51 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட வரி வசூல் இலக்கை இன்னும் அடைய முடியவில்லை எனவும் அதன்படி, வரி வருவாய் மற்றும் முதன்மை இருப்பு இலக்குகளை அடைய தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பு கூட்டப்பட்ட வரி விகிதம் 01-01-2024 முதல் 18% ஆக அதிகரிக்க அதனுடன் தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதுடன், சில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு உட்பட சில புதிய வரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply