பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 31 ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகள் 4 தோல்விகளுடன் ஏழாமிடத்திலும் பங்களாதேஷ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 வெற்றி 5 தோல்விகளுடன் ஒன்பதாம் இடத்திலும் காணப்படுகின்றன.
பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தால் உலககிண்ண அரை இறுதி வாய்ப்பை இழந்துவிடும். பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தாலும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் நடைமுறை சாத்தியமற்ற வாய்ப்புகள்.
பங்களாதேஷ் அணி 5 தொடர் தோல்விகளை சந்த்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணி 3 மாற்றங்களுடன் விளையாடுகிறது. ஷதாப் கானிற்கு பதிலாக மொஹமட் வசீமும் இமாம் உல் ஹக்கிற்கு பதிலாக பக்கர் சமானும் மொஹமட் நவாஸிற்கு பதிலாக அகா சல்மானும் விளையாடுகின்றனர். பங்களாதேஷ் அணி 2 மாற்றங்களுடன் விளையாடுகிறது. நசும் அஹமடிற்கு பதிலாக தஸ்கின் அஹமட்டும் ஹசன் மஹமுட்டிற்கு பதிலாக தௌஹித் ரிதோயும் விளையாடுகின்றனர்.
அணி விபரம்
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்
பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 06 | 06 | 00 | 00 | 12 | 1.405 |
தென்னாபிரிக்கா | 06 | 05 | 01 | 00 | 10 | 2.032 |
நியூசிலாந்து | 06 | 04 | 02 | 00 | 08 | 1.232 |
அவுஸ்திரேலியா | 06 | 04 | 02 | 00 | 08 | 0.970 |
ஆப்கானிஸ்தான் | 06 | 03 | 03 | 00 | 06 | -0.718 |
இலங்கை | 06 | 02 | 04 | 00 | 04 | -0.275 |
பாகிஸ்தான் | 06 | 02 | 04 | 00 | 04 | -0.387 |
நெதர்லாந்து | 06 | 02 | 04 | 00 | 04 | -1.277 |
பங்களாதேஷ் | 06 | 01 | 05 | 00 | 02 | -1.338 |
இங்கிலாந்து | 06 | 01 | 05 | 00 | 02 | -1.652 |