இந்நாட்டில் மரக்கறி விலைகள் சுமார் 30% வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பல பகுதிகளில் பெய்து வரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பல மரக்கறி தோட்டங்கள் முழுமையாக பாதிப்படைந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக அவரை, முட்டைகோஸ், தக்காளி போன்ற பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், பொருளாதார மையங்களுக்கு கிடைக்கும் குறித்த காய்கறிகளின் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொத்த விற்பனையில் ஒரு கிலோ போஞ்சியின் விலை 400 முதல் 420 ரூபாய் வரையிலும், கறி மிளகாய் ஒரு கிலோ 500 முதல் 550 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் கிலோ 500 முதல் 550 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.