பாகிஸ்தான் அதிரடி வெற்றி

பாகிஸ்தான் அதிரடி வெற்றி

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 31 ஆவது போட்டி இன்று (31.10) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலமாக பங்களாதேஷ் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்து 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி துடுப்பாட்ட வரிசையில் இன்று சில மாற்றங்களை செய்து துடுப்பாடிய போதும் ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை. ஆரம்பம் முதல் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட தடுமாறிய வேளையில் ,லிட்டோன் டாஸ், மஹமதுல்லா ஆகியோர் இணைந்து அணியை ஓரளவு மீட்டு எடுத்தனர். 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற வேளையில் முறியடிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்தன.

ஷகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை கைப்பற்றி இந்த தொடரின் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக மாறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சகலரும் சிறப்பாகவே பந்துவீசினார்கள்.

பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி வந்தது. பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சத இணைப்பாட்டத்தை தாண்டியது. இருவரும் 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட்டிருந்த பக்கர் சமான் ஆர்மபித்தில் அதிரடி நிகழ்த்தி பின்னர் நிதானமாக துடுப்பாடினார். மெஹிடி ஹசான் மிராசு சிறப்பாக பந்துவீசி முதல் வரிசை விக்கெட்களை தகர்த்துக்கொடுத்ததுடன் பாகிஸ்தான் அணியின் அதிரடியையும் கட்டுப்படுத்தினார்.

பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டினை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா  ஷபீக்L.B.Wமெஹிதி ஹசன் மிராஸ்686992
பக்கர் சமான்பிடி – தௌஹித் ரிடோய்மெஹிதி ஹசன் மிராஸ்817437
பபர் அசாம்பிடி – மஹ்மதுல்லாமெஹிதி ஹசன் மிராஸ்091610
மொஹமட்  ரிஸ்வான்  26 21
இப்திகார் அகமட்   17 15 2
      
       
       
       
       
       
உதிரிகள்  04   
ஓவர்  32.3விக்கெட்  03மொத்தம்205   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
தஸ்கின் அஹமட்06013600
ஷொரிபுல் இஸ்லாம்04012500
மெஹிதி ஹசன் மிராஸ்09006003
முஸ்ரபைசூர் ரஹ்மான்07004700
ஷகிப் அல் ஹசன்5.3003000
நஜ்முல் ஹொசைன் சாண்டோ01000500
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரன்ஷித் ஹசன் தமீம்L.B.Wஷஹீன் அப்ரிடி000500
லிட்டொன்  டாஸ்பிடி-அகா சல்மான்இப்திகார் அகமட்456460
நஜ்முல் ஹொசைன் சாண்டோபிடி-உசாமா மிர்ஷஹீன் அப்ரிடி040310
முஷ்பிகுர் ரஹீம்பிடி- முகமட் ரிஸ்வான்ஹரிஸ் ரவூப்050810
மஹ்மதுல்லாBowledஷஹீன் அப்ரிடி567061
ஷகிப் அல் ஹசன்பிடி- அகா சல்மான்ஹரிஸ் ரவூப்436440
தௌஹித் ரிடோய்பிடி- இப்திகார் அகமட்உசாமா மிர்070301
மெஹிதி ஹசன் மிராஸ்Bowledமொஹமட் வசீம்253011
தஸ்கின் அஹமட்Bowledமொஹமட் வசீம்061300
முஸ்ரபைசூர் ரஹ்மான்Bowledமொஹமட் வசீம்030700
ஷொரிஃபுல் இஸ்லாம்  010400
உதிரிகள்  09   
ஓவர்  45.1விக்கெட்  10மொத்தம்204   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி09012303
இப்திகார் அகமட்10004401
ஹரிஸ் ரவூப்08003602
மொஹமட் வசீம்8.1013103
உசாமா மிர்10006601
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா06060000121.405
தென்னாபிரிக்கா06050100102.032
நியூசிலாந்து06040200081.232
அவுஸ்திரேலியா06040200080.970
பாகிஸ்தான்0703040006-0.024
ஆப்கானிஸ்தான்0603030006-0.718
இலங்கை0602040004-0.275
நெதர்லாந்து0602040004-1.277
பங்களாதேஷ்0701060002-1.446
இங்கிலாந்து0601050002-1.652

பாகிஸ்தான் அணி 3 மாற்றங்களுடன் விளையாடியது. ஷதாப் கானிற்கு பதிலாக மொஹமட் வசீமும் இமாம் உல் ஹக்கிற்கு பதிலாக பக்கர் சமானும் மொஹமட் நவாஸிற்கு பதிலாக அகா சல்மானும் விளையாடினர். பங்களாதேஷ் அணி 2 மாற்றங்களுடன் விளையாடியது. நசும் அஹமடிற்கு பதிலாக தஸ்கின் அஹமட்டும் ஹசன் மஹமுட்டிற்கு பதிலாக தௌஹித் ரிதோயும் விளையாடினர்.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்4

Social Share

Leave a Reply