
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 31 ஆவது போட்டி இன்று (31.10) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலமாக பங்களாதேஷ் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்து 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணி துடுப்பாட்ட வரிசையில் இன்று சில மாற்றங்களை செய்து துடுப்பாடிய போதும் ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை. ஆரம்பம் முதல் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட தடுமாறிய வேளையில் ,லிட்டோன் டாஸ், மஹமதுல்லா ஆகியோர் இணைந்து அணியை ஓரளவு மீட்டு எடுத்தனர். 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற வேளையில் முறியடிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்தன.
ஷகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை கைப்பற்றி இந்த தொடரின் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக மாறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சகலரும் சிறப்பாகவே பந்துவீசினார்கள்.
பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி வந்தது. பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சத இணைப்பாட்டத்தை தாண்டியது. இருவரும் 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட்டிருந்த பக்கர் சமான் ஆர்மபித்தில் அதிரடி நிகழ்த்தி பின்னர் நிதானமாக துடுப்பாடினார். மெஹிடி ஹசான் மிராசு சிறப்பாக பந்துவீசி முதல் வரிசை விக்கெட்களை தகர்த்துக்கொடுத்ததுடன் பாகிஸ்தான் அணியின் அதிரடியையும் கட்டுப்படுத்தினார்.
பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டினை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபீக் | L.B.W | மெஹிதி ஹசன் மிராஸ் | 68 | 69 | 9 | 2 |
| பக்கர் சமான் | பிடி – தௌஹித் ரிடோய் | மெஹிதி ஹசன் மிராஸ் | 81 | 74 | 3 | 7 |
| பபர் அசாம் | பிடி – மஹ்மதுல்லா | மெஹிதி ஹசன் மிராஸ் | 09 | 16 | 1 | 0 |
| மொஹமட் ரிஸ்வான் | 26 | 21 | 4 | 0 | ||
| இப்திகார் அகமட் | 17 | 15 | 2 | 0 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 32.3 | விக்கெட் 03 | மொத்தம் | 205 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| தஸ்கின் அஹமட் | 06 | 01 | 36 | 00 |
| ஷொரிபுல் இஸ்லாம் | 04 | 01 | 25 | 00 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | 09 | 00 | 60 | 03 |
| முஸ்ரபைசூர் ரஹ்மான் | 07 | 00 | 47 | 00 |
| ஷகிப் அல் ஹசன் | 5.3 | 00 | 30 | 00 |
| நஜ்முல் ஹொசைன் சாண்டோ | 01 | 00 | 05 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரன்ஷித் ஹசன் தமீம் | L.B.W | ஷஹீன் அப்ரிடி | 00 | 05 | 0 | 0 |
| லிட்டொன் டாஸ் | பிடி-அகா சல்மான் | இப்திகார் அகமட் | 45 | 64 | 6 | 0 |
| நஜ்முல் ஹொசைன் சாண்டோ | பிடி-உசாமா மிர் | ஷஹீன் அப்ரிடி | 04 | 03 | 1 | 0 |
| முஷ்பிகுர் ரஹீம் | பிடி- முகமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரவூப் | 05 | 08 | 1 | 0 |
| மஹ்மதுல்லா | Bowled | ஷஹீன் அப்ரிடி | 56 | 70 | 6 | 1 |
| ஷகிப் அல் ஹசன் | பிடி- அகா சல்மான் | ஹரிஸ் ரவூப் | 43 | 64 | 4 | 0 |
| தௌஹித் ரிடோய் | பிடி- இப்திகார் அகமட் | உசாமா மிர் | 07 | 03 | 0 | 1 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | Bowled | மொஹமட் வசீம் | 25 | 30 | 1 | 1 |
| தஸ்கின் அஹமட் | Bowled | மொஹமட் வசீம் | 06 | 13 | 0 | 0 |
| முஸ்ரபைசூர் ரஹ்மான் | Bowled | மொஹமட் வசீம் | 03 | 07 | 0 | 0 |
| ஷொரிஃபுல் இஸ்லாம் | 01 | 04 | 0 | 0 | ||
| உதிரிகள் | 09 | |||||
| ஓவர் 45.1 | விக்கெட் 10 | மொத்தம் | 204 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஷஹீன் அப்ரிடி | 09 | 01 | 23 | 03 |
| இப்திகார் அகமட் | 10 | 00 | 44 | 01 |
| ஹரிஸ் ரவூப் | 08 | 00 | 36 | 02 |
| மொஹமட் வசீம் | 8.1 | 01 | 31 | 03 |
| உசாமா மிர் | 10 | 00 | 66 | 01 |
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| இந்தியா | 06 | 06 | 00 | 00 | 12 | 1.405 |
| தென்னாபிரிக்கா | 06 | 05 | 01 | 00 | 10 | 2.032 |
| நியூசிலாந்து | 06 | 04 | 02 | 00 | 08 | 1.232 |
| அவுஸ்திரேலியா | 06 | 04 | 02 | 00 | 08 | 0.970 |
| பாகிஸ்தான் | 07 | 03 | 04 | 00 | 06 | -0.024 |
| ஆப்கானிஸ்தான் | 06 | 03 | 03 | 00 | 06 | -0.718 |
| இலங்கை | 06 | 02 | 04 | 00 | 04 | -0.275 |
| நெதர்லாந்து | 06 | 02 | 04 | 00 | 04 | -1.277 |
| பங்களாதேஷ் | 07 | 01 | 06 | 00 | 02 | -1.446 |
| இங்கிலாந்து | 06 | 01 | 05 | 00 | 02 | -1.652 |
பாகிஸ்தான் அணி 3 மாற்றங்களுடன் விளையாடியது. ஷதாப் கானிற்கு பதிலாக மொஹமட் வசீமும் இமாம் உல் ஹக்கிற்கு பதிலாக பக்கர் சமானும் மொஹமட் நவாஸிற்கு பதிலாக அகா சல்மானும் விளையாடினர். பங்களாதேஷ் அணி 2 மாற்றங்களுடன் விளையாடியது. நசும் அஹமடிற்கு பதிலாக தஸ்கின் அஹமட்டும் ஹசன் மஹமுட்டிற்கு பதிலாக தௌஹித் ரிதோயும் விளையாடினர்.
அணி விபரம்
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்
பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்4