வரி செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நிறுவனங்கள் மதுபான உற்பத்தி மற்றும் பொருட்களை விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவும், கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒக்டோபர் 30ம் திகதியுடன் காலாவதியாகியிருந்ததுடன், அவற்றின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஐந்து மதுபான உற்பத்தி நிலையங்களில் மது உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், ஏனைய மதுபான உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் இருப்பதால் சந்தையில் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.