இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (02.11) காலை பாரிய நில நடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.