
அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 39 ஆவது போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அவர்களுக்கு வாய்ப்பு தொடரும். அவுஸ்திரேலியா அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளோடு நான்காமிடத்தில் காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளோடு ஆறாமிடத்தில் காணப்படுகிறது. இன்றைய போட்டி இந்த இரு அணிகளுக்கு மட்டுமன்றி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளது அரை இறுதி தெரிவிக்கும் இந்தப் [போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
ஆப்கானிஸ்தான் அணி முக்கிய அணிகளை வென்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் இன்று அவுஸ்திரேலியா அணிக்கு சவால் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.