கடும் மழை – ரயில் சேவைகள் பாதிப்பு!

இன்று (07.11) மாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மருதானை புகையிரத நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மின் சமிக்ஞைகள் செயலிழந்துள்ளமையால் பல ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீரிகம திவுலபிட்டிய பிரதான வீதியில் மீரிகம புகையிரத கடவைக்கு அருகாமையில் மழையினால் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Social Share

Leave a Reply