தபால் பணியாளர்களின் விடுமுறை ரத்து!

எதிர்வரும் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று (07.11) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சம்பத் லியனகே அறிவித்துள்ளதையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரலாற்று புகழ் பெற்ற தபால் நிலையங்களை தனியார் துறையிடம் ஒப்படைப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவும் இந்த பணி புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply