ஜனாதிபதியை யாரோ அழிக்க முயல்வதாக தாம் கருதுவதாகவும் கிரிக்கெட் அமைப்பின் ஊழல் திருடர்கள் ஜனாதிபதியை நெருங்க விடக்கூடாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (08.11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் பல விடயங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் விசாரணை நடத்துமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் அமைச்சரை மிரட்டும் அளவுக்கு இந்த திருடர் கும்பல் சக்தி வாய்ந்தது எனவும், LPL போட்டியை ஜனாதிபதி பார்த்துக் கொண்டிருந்தபோது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஷம்மி சில்வாவின் பாதுகாவலராக பாதாள உலகை சேர்ந்த ஒருவர் இருந்ததாகவும், அவரை கண்டு அன்று தாம் பயந்ததாகவும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.