ரயில் பாதையில் மரம் முறிவு – மலையக ரயில் சேவை பாதிப்பு!

கொழும்பு – பதுளை மலையக புகையிரத பாதையில் கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று (08.11) மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதால் அப்பாதை ஊடான புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பண்டாரவளை புகையிரத நிலைய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply