”மக்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்” – இம்தியாஸ் பக்கீர்!

பண பலத்தினாலும் ஆட்சி பலத்தினாலும் ஊடகங்களில் எவ்வாறு மோசமான செய்திகள் வெளியிடப்பட்டாலும் பாராளுமன்றத்தில் கற்பனைக் கதைகள் சொல்லப்பட்டாலும் மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது எனத் தெரிவித்த அவர், அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சக்திகளின் போராட்டத்தை நாட்டு மக்கள் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலமுறை ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு குழிக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் தற்போது வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களை நாடு நெருங்கி வரும் நிலையில் வியூகங்களை மாற்றி தேர்தல் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply