ஜனவரி மாதம் VAT உயர்த்தப்பட்டாலும் அது மின்சார கட்டணம் உட்பட பல துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சரும் பெருந்தோட்ட தொழில் முயற்சி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக வங்கி ஒப்பந்தங்களின்படி, VAT வரி அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டதாகவும், ஆனால் அது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வரி வலையமைப்பு விரிவாக முறைப்படுத்தபட்டதன் பின்னர், மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.