பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண் சரிவு!

பதுளை மாவட்டத்தின் வெலிமடை ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவுகளின் ஊடான பல வீதிகள் மண்சரிவில் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு காரணமாக கிரிகொல்லவிலிருந்து ஹாலி எல கெடவல செல்லும் பாதை மற்றும் போகஹகூம்புர வெலிபிஸ்ஸவெல ஊடாக ஹெவனகும்புர வீதி தடைப்பட்டுள்ளது.

இப்பாதைகளினூடான போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் இன்று முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹப்புத்தளை, ஹல்துமுல்லை மற்றும் வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய அறிவிப்புகள் இன்னும் அமுலில் உள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply