கிரிக்கெட் முறைகேடுகளை கண்டறிய விசேட தெரிவுக்குழு வேண்டும்!

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை கண்டறிய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (18.11) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்திற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவுக் குழுக்களை நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply