கடும் மழை தொடருமானால் எதிர்காலத்தில் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை செலுத்துவதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது முழு கொள்ளளவிற்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், எனினும் திடீரென விலையை குறைக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிவாரணம் வழங்கப்படுமாயின் அது மக்களுக்கு செய்யும் சிறந்த நன்மையாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.