இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 31% குடும்பங்கள் மீண்டும் கற்காலத்தில் வாழ்பவர்கள்கள் போல் துன்பப்படுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 500,000 குடும்பங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், வறிய குடும்பங்களில் மின்சாரமே கட்டணம் செலுத்தாமையால் அதிகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பல வீடுகளில் மின்சாதனங்கள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஒரே ஒரு மின்குமிழை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர், எனவும் அவர் சுட்டிக்காயுள்ளார்.