அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் படுக்கைவரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவர் அவர் பணிபுரியும் பிரிவுக்கு வருகை தராமல், தொலைபேசியிலும் பதிலளிக்காமல் இருந்ததால், மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் இல்லத்திற்கு சென்று பார்த்து, அவரை அழைத்தபோதும் பதில் இல்லாததால், வைத்தியசாலை மூலம் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் சென்று பார்க்கையில் அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.