ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் பிரகாரம் நமது நாடு பல் பரிமாண நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், LIRNE Asia கணக்கெடுப்பின்படி ஏழ்மையானோர் எண்ணிக்கை 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொருளாதாரம் மைக்ரோ பொருளாதாரம் மற்றும் மேக்ரோ பொருளாதாரம் என 2 பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும், மேக்ரோ பொருளாதாரத்தில், பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை, பணவீக்கம், வர்த்தக இருப்பு, கொடுப்பனவின் இருப்பு மற்றும் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவை கருதப்படுகின்றன என்றும், நுண்ணிய பொருளாதாரத்தில் தனிநபர்கள் மற்றும் வீட்டு அலகுகள் கருதப்படுகின்றன என்றும்,இது வியாபாரம் மற்றும் கைத்தொழில் குறித்து கவனம் செலுத்துகிறது என்றும், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டை கட்டியெழுப்ப,நுண் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், தனிநபர், குடும்ப அலகு மற்றும் வியாபார முயற்சியாண்மைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு உருவாக்கப்படும் பலத்தில் ஒரு நாடாக பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண முடியும் என்றாலும்,தற்போது நாட்டில் பொருளாதார முன்னேற்றம் இல்லாது பொருளாதார மந்தநிலையே உள்ளதாகவும், இந்த பொருளாதார வீழ்ச்சியில் பொருளாதாரம் சுருங்கி மக்களின் வாழ்க்கை சுருங்கிவிட்டதாகவும்,இவ்வாறான நிலையில், தொடர்ந்தும் மக்களைச் சுமையாக்கி, பல்வேறு சர்வதேச அமைப்புகளின் மனநிலையை வலுப்படுத்துவது நாட்டின் வழிமுறையாக அமையக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (28.11) நடைபெற்ற சனச அமைப்பின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.1250 சனச சங்கள் ஊடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் இன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வங்குரோத்து நிலையில் இருந்து வெளிவர 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து அரசாங்கம்,சமூகம் மற்றும் ஏனைய பன்முக அமைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட இணக்கப்பாட்டுடன்,இந்த பொருளாதார அபிவிருத்தியை செயல்படுத்த வேண்டும் என்றும்,இந்த மூலதன பலம் இங்குள்ள சாதாரண மக்களுக்கம் வர வேண்டும் என்றும்,சனச அமைப்பின் ஊடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-