முல்லைத்தீவு கொக்குத்துடுவாய் பிரதேசத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 37 மனித சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் திகதி முதல் நேற்று (27.11) வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின்போது இந்த எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனித எலும்புத் துண்டுகளுக்கு மேலதிகமாக, வெடிமருந்துகள், தோட்டாக்கள், இலக்கத் தகடுகள், சயனைட் துகள்கள், பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய ஆடைகள் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், நேற்று முதல் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.