நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளின் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதியின் ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.