பங்களாதேஷ் 19 வாயத்த்திற்குட்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 19 வயதிற்குட்டபட்ட அணிகளுக்கிடையில் இன்று (17.12) 19 வயதத்திற்குட்டபட்ட ஆசிய கிண்ணத்தின் இறுதிப்போட்டியாக டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 195 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 19 வயதிற்குடப்பட்ட ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணி 19 வயதிற்குட்டபட்ட ஆசிய கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு 2 தடவை வருகை தந்தது. ஐக்கிய அரபு அமீரகம் அணி 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக வருகை தந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது. இதில் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி 129(149) ஓட்டங்களையும், செளவ்டுர் MD ரிஸ்வான் 60(71) ஓட்டங்களையும், அரிபுல் இஸ்லாம் 50(40) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அய்மன் அஹமட் 4 விக்கெட்களையும், ஒமிட் ரெஹ்மான் 2 விக்கெட்களையும், ஹர்டிக் பை, துருவ் பரஷர் ஆகியோர் தலா ஒவ்வொரு’விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. துருவ் பரஷர் ஆட்டமிழக்காமல் 25(40) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மறுப் மிரிடா, ரொஹனட் டௌல்லா போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், இக்பல் ஹொசைன் எமொன், ஷெய்க் பவீஸ் ஜிபொன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி தெரிவு செய்யப்பட்டார்.