இந்தியாவிடம் தென்னாபிரிக்கா மோசமான தோல்வி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று (17.12) ஜொஹனஸ்பேர்க்கில் 1 ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 27.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. இதில் அண்டில் பெலுக்வாயோ 33(49) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும், அவேஷ் கான் 4 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது. இதில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழக்காமல் 55(43) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 52(45) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வியான் முல்டர், அண்டில் பெலுக்வாயோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக அர்ஷ்தீப் சிங் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply