சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிரத்து 568 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 39 பேர் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள குறித்த 8 பாடசாலைளையும் தற்காலிக தங்குமிடங்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 3 பாடசாலைகளிலும், ஒட்டுச்சுட்டான் பிரதேச செயாலாளர் பிரிவிலுள்ள 5 பாடசாலைகளில் இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply