மின் வேலியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழப்பு..!

அனுராதபுரம் – மதவாச்சி, ஹெலம்பகஸ்வெவெ பகுதியில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

உழுந்து சேனையொன்றினுள் நுழைய முற்பட்ட போது குறித்த யானை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 22 வயதுடைய காட்டு யானையே உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அனுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply