கலபடை நீர்வீழ்ச்சியில்; நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் தனது நண்பர்கள் சிலருடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது, குறித்த மாணவன், பிரதேசவாசிகளால் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகன்னாவ பானபொக்க பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.