இந்தியப் பெருங்கடலின் மாலைத்தீவுக்கு அருகில் இன்று காலை நான்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் 4.8 மெக்னிடியூட்டாக முதலாவது நிலஅதிர்வு பதிவானதுடன் 5.8 மெக்னிடீயூட்டாக இரண்டாவது நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரிக்டர் அளவில் 5.2 மற்றும் 5.0 மெக்னிடியூட் அளவில் மேலும் இரு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.