18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயம்..!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பளம் பெறுவோர் மாத்திரம் இந்த வரிக்கொள்கைக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நடைமுறைக்கணக்கொன்றை ஆரம்பித்தல், கட்டிட நிர்மாணத்திற்கு அனுமதி கோரல் மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்தல், உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் காணி உரிமையைப் பதிவு செய்தலின் போது வரி செலுத்துனர் அடையாள இலக்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

WWW.IRE.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டோர், வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக உள்நாட்டு இறைவரி பிரதேச அலுவலகங்களிலும், தலைமை அலுவலகத்திலும் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply