கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் படுகொலை..!

மஹியங்கனையில் கணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவன் மது போதையில் தன் மீதும் பிள்ளைகள் மீதும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குறித்த பெண் நேற்றிரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

பொலிஸார் அவரின் வீட்டிற்கு சென்று பார்வையிட்ட போது கணவன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபர் முன்னதாகவே உயிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவரின் மனைவி மஹியங்கனை பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply