நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கலவானை, கிரியல்ல, கஹவத்தை, இறக்குவானை மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சில வீதிகளின் போக்குவரத்து ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.