தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு புதிய நிறைவேற்று அதிகாரி..!

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விசேட வைத்தியர் சவின் சேமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிடமாகக் காணப்பட்ட பதவிக்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களிலிருந்து, சவின் சேமகே தெரிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட வைத்தியர் சவின் சேமகே இதற்கு முன்னரும், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply