வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளவத்தை ப்டெரிக்கா வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு கோடிக்கும் அதிகமான பெறுமதியான கொக்கெஹின் வகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 960 கிராம் கொக்கெஹின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.