கிளிநொச்சின் நீர்பாசன கால்வாயில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில் நேற்றிரவு விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 மற்கும் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.