”அபே ஜனபல” கட்சியின் தலைவரான சமன் பெரேரா உட்பட ஐவர் கொலை செய்யப்பட்ட ஹம்பாந்த்தோட்டை, பெலியத்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான, தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி மற்றும் தந்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரான முன்னாள் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி (39) மற்றும் இந்த கொலை சம்பவத்திற்கு உதவிய அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோர் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஹம்பகா,பல்லேவல பகுதியில் தலைமறைவாகியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.