இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியா முன்னாள் முதற் தர கிரிக்கெட் வீரர் கிரைக் ஹோவார்ட் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இரண்டு வருடங்களுக்கான ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடனான சர்வதேசப் போட்டி தொடருக்கு முன்னதாக இலங்கை அணியோடு இவர் இணையவுள்ளார்.
நியுசிலாந்து அணியின் வைட் பெர்ன்ஸ் மற்றும் விக்டோரியன் அணிகளது சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே இலங்கை அணியோடு இணைகிறார்.
அவுஸ்திரேலியா விக்டோரியா அணிக்காக இவர் வெறுமனே 16 முதற் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 42 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். தொழில் சார் கிரிக்கெட் போட்டிகளில் 4 வருடங்கள் மாத்திரமே விளையாடியுள்ளார். இவர் 12 வருட காலமாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஆலோசக பயிற்றுவிப்பாளராகவும், சுழற்பந்துக்கான தலைமைதிகாரியாகவும் கடமையாற்றியுளார்.