வருமானம் அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வு..!

வருமானம் அதிகரித்தால் மாத்திரமே அரசு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் பெற்று அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாது என தெரிவித்த நந்தலால் வீரசிங்க இந்த வருடத்தில் 3 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் உற்பத்தி செயல்முறை 3 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அதற்கான பின்னணியினை உருவாக்கி கொண்டு செல்வதாகவும் அதன் மூலமே மக்களால நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply