இலங்கையின் கடன் திட்டங்களை மீள் ஒழுங்குபடுத்திய பின்னர் அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு நெளிநாடுகளிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நேற்று(05.02) தெரிவித்துள்ளார். 11 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் மீளமைப்பு தொடர்பிலான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இந்த வருடம் மே மாதமளவில் இந்த திட்டங்கள் நிறைவுக்கு வருமென எதிர்பார்ப்பதாகவும் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 12 தொடக்கம் 24 மாதங்களுக்குள் அபிவிருத்தி திட்டங்கள், அரச நிறுவனகளை விற்பனை செய்தல் போன்றவை உள்ளடங்கலாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குள் வருமென நம்பிக்கை வெளியிட்ட அவர், தனியார் வெளிநாட்டு கடன்கள் 16 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் அடைந்த மிக மோசமான பொருளாதர பின்னடைவை சந்தித்துள்ளது இதுவே முதற் தடவை.