19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவாகியுள்ளது. 15 ஆவது தொடரில் ஐந்தாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவாகியுள்ளது.
நேற்று(08.02) தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான மிக இறுக்கமான போட்டியில் இறுதி ஓவரில் 1 விக்கெட்டினால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. இதில் அஷான் அவைஸ், அரபாத் மின்ஹாஸ் ஆகியோர் தலா 52 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ரொம் ஸ்டர்கர் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹரி டிக்ஸன் 50 ஓட்டங்களையும், ஒலிவர் பீக் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் அலி ராஷா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.