ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு..

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தியதன் பின்னரே அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

Social Share

Leave a Reply