மக்கள் விடுதலை முன்னணிக்கு போதிய அறிவில்லை –  அமைச்சர் பந்துல குணவர்தன

மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாக காணப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(12) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆட்சியில் பங்கேற்ற காலம் மிகக் குறைவு எனவும், குறித்த கட்சி வெற்றி பெற்ற திஸ்ஸமஹாராம பிரதேச சபையை உரிய முறையில் நிர்வகிக்க முடியாததால் அதிகாரம் வேறு அரசியல் குழுவிற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர மாற்று முறை இல்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர்த்து வேறு மாற்று வழிகள் இருப்பின் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

Social Share

Leave a Reply