வெப்பநிலையில் திடீர் மாற்றம்..

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் ஓட்டம்(Wind Flow) குறைவடைந்துள்ளதால், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிகளவு வெப்பம் உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடத்தில் இந்த காலப்பகுதியில் வெப்பம் அதிகளவு உணரப்படுவது வழமையானதாகும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சூரியன் நேரடியாக இலங்கைக்கு மேல் நிலைக்கொள்ளும் என்பதால், எதிர்வரும் சில மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(12) பிற்பகல் வேளையில், கொழும்பில் 35°C, கட்டுநாயக்கவில் 33°C, மாத்தறையில் 32°C, குருநாகலில் 31°C மற்றும் இரத்தினபுரியில் 31°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இருப்பினும் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 30°C குறைவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Social Share

Leave a Reply