ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதிக்குள் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது..

பொதுத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் அதற்கான நிதி 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குரியது என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply