இன்று முதல் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானம்..

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு, இன்று (13) முதல் வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 17,000 ரூபா உதவித்தொகை 11,800 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட தொகையில் 50 வீதத்தை உடனடியாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply