கொழும்பு 15, மோதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 14, மஹவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.