பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்ற அறிவிப்பு..!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் 03, 40, 53, மற்றும் 70 ஆகிய சரத்துக்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ இன்றைய சபை அமர்வின் போது அறிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply