தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) இன்று (22.02) காலமானார்.
உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.