நானுஓயா ரதெல்ல வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.