சுற்றுலாத்துறையில் நல்ல மாற்றம்…

கடந்த (24.02) அன்று மட்டும் 10,014 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், நாட்டில் சுற்றுலாத்துறை மீண்டும் செயற்பட்டதன் பின்னர் ஒரே நாளில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 191,018 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 399,271 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் 27,909 ரஷ்ய சுற்றுலா பயணிகளும் 26,161 இந்தியர்களும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply